தமிழ் சினிமாவில் துணை நடிகை மற்றும் காமெடி நடிகையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை தேவதர்ஷினி. இவர் தனது நடிப்புத் திறமையினால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தேவதர்ஷினி தனது மகளை 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.இப்படத்தில் நியதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் மூலம் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் 2019ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளிவந்த விசில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்தினால் இப்படத்தை தவற விட்டு விட்டார்.ஆனால் தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரதில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை தேவதர்ஷினி இசைவெளியீட்டுவிழா பேட்டியில் நான் மெர்சல் திரை படத்தில் நடித்திருந்தேன். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை எடிட்டிங் செய்யும் பொழுது நான் நடித்திருந்த காட்சியை எடுத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.அதற்கு விஜய் இந்த முறை அப்படி ஆகாது என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்னொரு பேட்டியில் நடிகர் விஜய் என்னை அக்கா என்று உரிமையாக கூப்பிடது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதுமட்டுமல்லாமல் நானும் என் மகளும் அவரின் மிகப்பெரிய ரசிகைகள். விசில் பட ஷூட்டிங்கின்போது நியதியும் என் கூட வந்து இருந்தாள். எப்படியாவது விஜய்யுடன் போட்டோ எடுத்து விட வேண்டும் என்று கூறினார். ஆனால் விஜய் சார் பட ஷூட்டிங்கின்போது மிகவும் பிஸியாக இருந்ததால் போட்டோ எடுக்கவில்லை.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து திடீரென்று எங்கள் முன்வந்து 96 படத்தில் உங்கள் மகள் உங்களை விட நன்றாக நடித்திருந்தார் என்று கூறிவிட்டு பத்து நிமிடம் என் மகளுடன் பேசினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று தேவதர்ஷினி கூறியிருந்தார்.
நியதிக்கு பிகில் படத்தில் ஃபுட்பால் போட்டியாளராக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுத வேண்டும் என்பதால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தார்.