90ஸ் கனவுக்கன்னி நடிகை கனகாவை நியாபகம் இருக்கிறதா.! தற்பொழுது அவருடைய நிலைமை இதுதான்..

kanaka-1

என்னதான் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு ஒரு சில நடிகைகள் மட்டும் ரசிகர்கள் மனதில் தீராயிடம் பிடித்திருப்பார்கள் அந்த வகையில் 90களில் கலக்கி வந்தவர் தான் நடிகை கனகா. இவருடைய அழகு வசீகரமான தோற்றம் போன்றவை ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயதானதால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார். அந்த வகையில் தற்பொழுது மொத்தமாக சினிமாவை விட்டு விலகி இவர் தீராத மனநோயில் இருப்பதாகவும் தற்பொழுது அவர் எந்த நிலைமையில் இருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

இவர் ராம்ரஜ் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு தமிழனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அசத்தினார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் அந்த இவர் குறிப்பிட்ட காலத்தில் சினிமாவை விட்டு விலகினார்.

kanaka
kanaka

இந்நிலையில் கனகா பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருகிறாராம் இவர் யாரிடமும் சந்தித்து பேசுவதில்லை தனி அறையில் தனிமையாக வாழ்வதை விரும்பி வருகிறாராம் அதற்கு சில காரணங்களும் இருப்பதாகவும் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதனால் தான் கனகா தனியாக வசித்து வருகிறார் என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கூறியுள்ளார்.