Actress Sivaranjani: மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஏராளமான நடிகைகள் தாங்கள் நடித்த சில திரைப்படங்களிலேயே சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர். அந்த வகையில் குறுகிய காலம் மட்டுமே சினிமாவில் பயணித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சிவரஞ்சனி.
90 காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சிவரஞ்சனியின் உண்மையான பெயர் உமா மகேஸ்வரி சினிமாவிற்காக சிவரஞ்சனி என பேரை மாற்றிக் கொண்டார். சிவரஞ்சனி 1990ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஜப்பானில் தொடர்ந்து 23 வாரங்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்த ஒரே தமிழ் திரைப்படம்.?
இந்த படத்தையும் தொடர்ந்து தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சிவரஞ்சினியை தமிழ் ரசிகர்கள் கண்ணழகி என புகழ்ந்தனர்.
பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்து பிரபலமான சிவரஞ்சனி கடைசியாக 1997ஆம் ஆண்டு தமிழில் வெளியான துர்க்கை அம்மன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவை விட்டு விலகினார். சினிமாவை விட்டு விலகிய சிவரஞ்சனி பிரபல தெலுங்கு நடிகர் மீகா ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இப்படி தனது குடும்பத்தினருடன் சிவரஞ்சனி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கு திரைவுலகின் முன்னணி நடிகராவார் இவர் கடைசியாக தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் ஸ்ரீகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.