தமிழ் சினிமாவில் பல்வேறு வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் நடிகைதான் ஜோதிகா இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்தில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
ஆனால் தற்போது திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவது மட்டும் இல்லாமல் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து காற்றின்மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள்வந்தாள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் குழந்தைகள் பல்வேறு வன் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகள் ஒவ்வொருவரும் பெற்றோரிடம் எந்த ஒரு விஷயங்களையும் மறைக்கக்கூடாது என்பதை பொன்மகள்வந்தாள் திரைப்படத்தின் மூலம் தன்னை தெளிவாக தெரிவித்து இருப்பார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு அவருடைய உறவினர் 48 வயதுடைய ஒருவர் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் தாயிடம் எதையும் மறைக்க கூடாது என்ற காட்சியை பார்த்து விட்டு தன்னுடைய தாயாரிடம் இந்த உண்மையை அந்த சிறுமி கூறியுள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் 5 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக திரைப்படங்கள் அனைத்தும் பொழுதுபோக்காக இல்லாமல் இதுபோன்று சமூகத்தில் மாற்றம் கொடுப்பதாக இருந்தால் நல்லது என பலரும் கொண்டாடி வருகிறார்கள்.