Tamil Movies: வாரம் தோறும் தொடர்ந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில் இதனை அடுத்து விஜய்யின் லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்படி தற்பொழுது ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
அதாவது அக்டோபர் 6ம் தேதியான இன்று 9 பிரபலங்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. அதன்படி த்ரிஷாவின் தி ரோட், விஜய் ஆண்டனியின் ரத்தம், விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று, மதுர் மீட்டரில் 800, சாட் பூட் த்ரீ, வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேந்திரனின் இந்த க்ரைம் தப்பில்ல, எனக்கு எண்டே கிடையாது மற்றும் என் இனிய தனிமையே உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த படங்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தினை சி.எஸ் அமுதன் இயக்கியிருக்கும் நிலையில் க்ரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளது. எதற்காக கொலை செய்கிறார்கள் என்ற நோக்கமே சரியாக புரியாத அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கலவை விமர்சனத்தை கூறி வருகின்றனர்.
ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சில பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.