ஆகஸ்ட் மாதத்தை அலறவிட வரும் 9 திரைப்படங்கள் – லிஸ்ட்டில் உங்கள் ஃபேவரைட் ஹீரோ படம் இருக்கா..

kuruthi-aatam
kuruthi-aatam

ஒரு வருடத்திற்கு டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் ஒரு படமாக இருந்தாலும் தரமாக கொடுத்து வருகின்ற நிலையில் இளம் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை கொடுத்து அசத்துகின்றனர். அப்படி ஒரு வருடத்திற்கு எண்ணற்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கின்றன.  அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் மட்டும் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

1. திருச்சிற்றம்பலம் : தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பாரதிராஜா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் அதனால் படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கின்றன.

2. குருதி ஆட்டம் : அதர்வா நடிப்பில் எட்டு தோட்டா படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சில ஆண்டுகளாக உருவாகி வந்த குருதி ஆட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையில் வர இருக்கிறது. 3. எண்ணி துணிக : ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

4. காட்டேரி : நடிகர் வைபோ மற்றும் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருந்த காட்டேரி திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியீடு தள்ளிக்கொண்டே சென்ற நிலையில் ஒரு வழியாக படம் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 5. டைரி : அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டைரி திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

6. பிசாசு 2 : இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. விருமன் : கார்த்திக் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமந்தா நடிப்பில் உருவாகி வரும் யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.