Rajini : பண்டிகை நாட்களில் டாப் நடிகர்களின் படங்கள் வெளிவருவதும் அதனை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவதும் வழக்கம்.. ஏனென்றால் பண்டிகை நாள் விடுமுறை நாளாக இருக்கும் என்பதால் அந்நாளில் பலர் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதன் மூலம் நல்ல வசூல் ஈட்டலாம் என்றும் பல தயாரிப்பாளர்கள் பண்டிகை நாட்களில் படத்தை வெளியிடுவது வழக்கம்.. இந்த நிலையில் வருகின்ற 2024 பொங்கலுக்கு எந்தெந்த திரைப்படத்தில் வெளியாக இருக்கின்றன என்பதை பார்ப்போம்..
1. சிவகார்த்திகேயனின் “அயலான்” படம் நீண்ட நாளாக இழுப்பறியில் இருந்து வரும் நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றன. ராம்குமார் இயக்கத்தில் ஏலியன்களை வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிய அளவில் காத்திருக்கின்றனர்..
2. ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள “லால் சலாம்” படமும் வர பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றன இந்த படத்தில் ரஜினி மொஹைதீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார்.. 3. சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றன.
இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து மற்ற மொழி படங்களும் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீசாக இருக்கின்றன.. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது, விஜய் தேவர் கொண்டா நடித்து வரும் அவரது 13ஆவது படத்தின் படப்பிடிப்பும் முக்கால்வாசி முடிந்த நிலையில் சங்கராந்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து ரவி தேஜாவின் ஈகிள், வெங்கடேஷ் ஆர்யாவின் சைந்தவ், நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள நா சாமி ரங்கா, தேஜா சஜாவின் ஹனுமான் போன்ற படங்களும் சங்கராதிக்கு ரிலீஸ் ஆக இருக்கின்றன ஆக மொத்தம் 9 படங்கள் பொங்கலை குறி வைத்து வசூலில் கல்லாகட்ட காத்திருக்கின்றன.