முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 9 திரைப்படங்கள்.! மாஸ் காட்டிய தென்னிந்திய நடிகர்கள்

Jawan
Jawan

First day 100 cores collection movie list : 2023 ஆம் ஆண்டு டாப் நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அஜித், விஜய் ஆகியவர்களை தொடர்ந்து ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தை ரசிகர்கள் பெரு அளவு எதிர்பார்ப்பனர் படம் ஒரு வழியாக நேற்றைய கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை..

பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் ஜவான் படத்தை பார்க்க கூட்டம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது முதல் நாளில் மட்டுமே இந்திய அளவில்  ஜவான் படம் 75 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்றும், உலக அளவில் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் ஜவான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிலையில் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் குறித்து நமக்கு தகவல் வந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான பாகுபலி 2 முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. ரஜினி –  2.0,  ரஜினி –  கபாலி, பிரபாஸ் – சகோ, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் – RRR, யாஷ்  – KFG2, ஷாருக்கான் – பதான், பிரபாஸ் – ஆதிபுருஷ், ஷாருக்கான் – ஜவான். ஆகிய 9 திரைப்படங்கள் தான் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.