வெள்ளித்திரையில் எப்படி போட்டி போட்டுக் கொள்கிறார்களோ அதே போல சின்ன திரையிலும் பல்வேறு தொலைக்காட்சிகள் டிஆர்பி யில் நம்பர் 1 இடத்தை பிடிக்க மோதிக்கொள்வது வழக்கம் இதற்காக பல தொலைக்காட்சிகள் மக்களை கவர்ந்து இழுக்க தொடர்ந்து பல்வேறு புதிய சீரியல் மற்றும் ஷோக்களை நடத்துகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களையும் தாண்டி புது புது ரியாலிட்டி ஷோக்களை நடத்தி ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்து இழுத்து அசத்தி வருகிறது. அந்த வகையில் ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியை தொடர்ந்து தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 அடி எடுத்து வைக்க இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் விஜய் டிவி பக்கம் சென்று உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை வெளிவந்து அசத்தின. இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருப்பதால் பிக் பாஸ் சீசன் 6 யில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 மொத்தம் ஒன்பது ஆண் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக தற்பொழுது பார்ப்போம். பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது விஜய் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் ராகவன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சத்யா கலந்து கொள்ள இருக்கிறார்.
அவரை தொடர்ந்து தொகுப்பாளர் ரக்சன் சூப்பர் சிங்கர் ஷாம் விஷால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் அசுரன் இமைக்கா நொடி போன்ற படங்களில் நடித்த டி ஜே அருணாச்சலமும் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியை வாசிப்பாளராக வலம் வரும் ரஞ்சித் மற்றும் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து மாடலிங் துறையில் இருக்கும் அஜய் மெல்வின் என்பவரையும் தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.