Blue sattai maran review: சந்தானம் நடிப்பில் 80s பில்டப் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தினை பார்த்துவிட்டு மரணம் மொக்கையான படம் என ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றியுள்ளார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் ராதிகா ப்ரீத்தி, கே.எஸ் ரவிக்குமார், சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ் காந்த் ஆகியோர்களின் கூட்டணியில் நேற்று 80s பில்டப் படம் திரையரங்குகளில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறைந்த ஓட்டுக்களை வாங்கி இந்த வாரம் வெளியேறப் போகும் முக்கிய போட்டியாளர்.? குஷியில் ரசிகர்கள்
ப்ளூ சட்டை மாறன் சந்தானத்தின் 18s பில்டப் படத்தில் எந்த ஒரு சுவாரசியமும் நகைச்சுவையும் இல்லை என்றும் கடைசிவரை கூட்டம் கூட்டமா நின்று கொண்டு வளவளவென பேசிக்கொண்டே இருக்கின்றனர் யாருமே சீரியஸ் ஆக நடித்தது போல் தெரியவில்லை என விமர்சித்துள்ளார். மேலும் பட கதை குறித்து, கதை என்று பார்த்தால் சந்தானம் மற்றும் அவரது சகோதரி தாத்தா இறந்த வீட்டிற்கு வரும் ஹீரோயினை சந்தானம் காதலிக்க வைப்பாரா மாட்டாரா என்கின்ற போட்டியை நடத்துகின்றனர்.
பழைய பண்ணையார் வீடான அந்த வீட்டில் இருக்கும் ஒரு கத்தியில் விசேஷம் இருப்பதாக அதை கொள்ளையடிக்க மன்சூர் அலிகான் கடத்த வருவதும் உயிரிழந்த தாத்தாவைக் கொண்டு செல்ல எமதர்மன் கே.எஸ் ரவிக்குமார் வருவதாகவும் ஏகப்பட்ட கிளைக் கதைகள் ஓடிக்கொண்டிருக்கிறதே தவிர உருப்படியான கதைக்கு படம் வரவே இல்லை என்றும் ஜாலியாக பார்க்க வந்த படத்தில் அவர்கள் போட்ட மொக்கையை பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம்.
இது போன்ற படங்களை ரசிகர்கள் கைவிட்டு விடக்கூடாது என்று தியேட்டருக்கு சென்ற போனை ஃபுல் சார்ஜ் போட்டு எடுத்துக் கொண்டு மற்ற செய்திகளையும் மற்ற வேலைகளையும் பார்த்துக் கொண்டே படத்தைப் பார்த்து ஆர்வம் கொடுக்க வேண்டும் என பங்கமாக கலாய்த்து உள்ளார்.
மேலும் இந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு கை கொடுத்த நிலையில் அவர் 10 படங்கள் நடித்தால் ஒரு படம்தான் ஹிட் அடிக்கும். இப்போதைக்கு அவர் படத்தை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.