அஜித்துக்கு 80.. விஜய்க்கு 20.. நடிகை த்ரிஷா போட்ட மார்க்.! கோபத்தில் ரசிகர்கள்.!

trisha
trisha

நடிகை திரிஷா திரை உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுதும் இவரது மார்க்கெட் குறைந்த பாடவில்லை.. உச்ச நட்சத்திர  நடிகர்களின் படங்களில்  நடித்து  வருகிறார். அந்த வகையில் தற்போது  நடிகை திரிஷா இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

முதல் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்கும் என திரிஷா நம்பி இருக்கிறார் இது தவிர பல்வேறு புதிய படங்களிலும் திரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். திரை உலகில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் திரிஷா..

அவ்வபோது பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படி சமீபத்தில் பேட்டி ஒன்று சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். பேட்டியில் நிருபர் ஒருவர் ஒவ்வொரு நடிகர்களிடமும் நட்பு மீட்டர் குறித்து கேட்டார் அப்பொழுது திரிஷா நடிகர் விஜய்க்கு 20 சதவீதம் என மதிப்பிட்டார் மேலும் அஜித்திற்கு 80 சதவீதம் என மதிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியது விஜய், அஜித் ஆகியோர் என்னுடைய நண்பர்கள் என கூற முடியாது..

அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது நன்றாக பேசிக் கொள்வோம் ஆனால் அஜித் சார் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை திரிஷா இவர்களை விட விஜய் சேதுபதி தற்போது என்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார் 96 படத்திற்கு பிறகு நல்ல நண்பர்களாக மாறினோம் விஜய் சேதுபதிக்கு நான் 90 சதவீதம் மதிப்பு கொடுப்பேனே என அவர் கூறினார்.

இச்செய்தி தற்போது விஜய் ரசிகர்களை ரொம்பவும் கடுப்பேத்தி உள்ளது விஜய் உடன் நடிகை திரிஷா கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நன்றாக நடித்திருப்பார் அப்பொழுது இருந்து விஜயை பார்த்து வருகிறார் அவருக்கு வெறும் 20% தானா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.