உலக அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த 8 தமிழ் திரைப்படம்.! தொட முடியாத உச்சத்தில் விஜய்

Vijay
Vijay

தமிழ் சினிமாவில் இன்று வெளி வருகின்ற டாப் நடிகர்களின் படங்கள் அசால்டாக 200 கோடி 300 கோடி வசூல் செய்கின்றன அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தோஷமடைந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சன் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முதல் நாளில்  தமிழ் சினிமாவில் வெளியான படங்களில்  முதல் நாளில் உலக அளவில் அதிக வசூல் செய்த 8 திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

2.0 : பிரம்மாண்ட இயக்குனர் ஷ்ங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில்  சுமார் 100 கோடி வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில்  உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன் படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட முடிவு செய்தது அதன்படி முதல் பாகம் வெளிவந்து முதல் நாளில் மட்டும் உலக அளவில் 80 கோடி வசூல் செய்தது .

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம்  ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் முதல் நாளில் மட்டும் 72 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சர்க்கார்  : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஒத்த ஓட்டை வைத்து அரசியலை மாத்த முடியாம் என்பதை தெள்ளத் தெளிவாக இந்த படம் எடுத்துரைக்கும் படத்தில் விஜய் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர் படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 69 கோடி வசூல் செய்தது.

விக்ரம் : லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருள் விற்கும் ரவுடிகளை அழிப்பது தான் கதை படத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது விக்ரம் திரைப்படம் முதல் நாளில் மற்றும் உலக அளவில்  66 கோடி வசூல் செய்தது.

பீஸ்ட்  : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மால்லை ரவுடி வில்லன்கள்  ஹைஜெக் பண்ணி வீடுவர்கள் இதிலிருந்து மக்களை எப்படி விஜய் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை படம் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது இந்த படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 65 கோடி வசூல் செய்து இருக்கும் என கூறப்படுகிறது.

பிகில்  : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கால்பந்து சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது முதல் நாளில் மட்டும் உலக அளவில் 55 கோடி வசூல் செய்தது.

மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரையை படம் சீர்திருத்த பள்ளியில் தவறாக நடக்கும் விஷயத்திற்கு யார்  காரணம் என்று தெரிந்து கொண்டு அவரை அழிக்கும்  வேலையில் விஜய் இறங்குவார் படம் விறுவிறுப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியே மிகப்பெரிய வசூலை அள்ளியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் 52.5 கோடி வசூல் செய்தது.