தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஜெய்யுடன் இணைந்து தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெய் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
தற்பொழுது நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதனை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார். நயன்தாரா நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை எனவே நயன்தாரா 65 நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா, ஆர்யா, ஜெய், நயன்தாரா ஆகியோர்கள் இணைந்து நடித்த நிலையில் பிறகு மீண்டும் நயன்தாரா, ஜெய் நடிப்பில் நயன்தாரா 75 திரைப்படம் உருவாக இருக்கிறது. மேலும் தற்பொழுது இந்த படத்திற்கு லேடி சூப்பர் ஸ்டார் 75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தினை சங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில் மேலும் இந்த படத்தினை ஜீ நிறுவனம் மற்றும் டிரைடண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா மற்றும் ஜெய் ஆகியோர்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், ரெடியின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சுதக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி உள்ளிட்ட எட்டு பிரபலங்கள் தற்பொழுது இந்த படத்தில் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான போஸ்டரை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படம் சத்தியசூரியன் ஒளிப்பதிவில் தமன் இசையமைப்பில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.