2022-ல் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 8 திரைப்படங்கள் – விக்ரம், பீஸ்ட் படத்தையே முந்திய படம்.!

kamal-
kamal-

வருடத்திற்கு தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன. ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். சில படங்கள் வெற்றி பெறும் சில படங்கள் தோல்வியை தழுவும் ஒரு சில படம் ஆரம்பத்திலேயே காணாமல் போய்விடும். இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் எது என்பது குறித்து பார்க்க இருக்கிறோம். இந்த வருடத்தில் டாப் 8 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அந்த எட்டு படங்களில் எந்த படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

8. விருமன் : முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதை என்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் வெள்ளிக்கிழமை வெளிவந்தது முதல் நாளில் மட்டுமே சுமார் 8.21 கோடி வசூல் செய்துள்ளது.

7. KGF 2 : பிறமொழி படங்களும் தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் அந்த வகையில் கேஜிஎப் இரண்டாவது பாகம் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 8.24 கோடி வசூல் செய்ததாம்.

6. டான் : நடிகர் சிவகார்த்திகேயன் அண்மை காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வரிசையில் டான் திரைப்படமும் ஒரு வெற்றி படம் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது முதல் நாளில் மட்டுமே டான் திரைப்படம் 9.47 கோடி வசூல் செய்தது.

5. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் RRR. இந்த படமும் தமிழிலும் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் சுமார் 12.73 கோடி வசூல் செய்து அசத்தியது.

4. நடிகர் சூர்யா ஜெய் பீம் சூரரை போற்று திரைப்படங்களை தொடர்ந்து நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த படம் முழுக்க முழுக்க சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 15. 21 கோடி வசூல் செய்தது.

3. விக்ரம் : நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது அண்மையில் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் விக்ரம் தான் இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. முதல் நாளில் மட்டுமே 20. 61 கோடி வசூல் செய்ததாம்

2. வெற்றி நாயகன் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீஸ்ட் இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது முதல் நாளில் மட்டுமே 26. 40 கோடி வசூல் செய்தது.

1. வலிமை : அஜித் அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வரிசையில் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது 200 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டுமே இந்த திரைப்படம் 36.17 கோடி வசூல் செய்தது. முதல் இடத்தையும் வலிமை திரைப்படம் தான் பிடித்துள்ளது.