Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து 200 நாட்களுக்கு மேல் ஓடிய 8 திரைப்படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் 16 வயதினிலே இந்த படத்தில் ரஜினி பரட்டையனாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த படம் வெளிவந்து 200 நாட்களுக்கு மேல் ஓடி அசத்தியது.
1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் படமாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 260 நாட்களுக்கு மேல் ஓடியது.
1982 ஏ ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் மூன்று முகம் படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருப்பார் அது இன்று வரையும் பேசப்படுகிறது இந்த படம் ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் என்பதும் குறிப்பிடத்தக்கது அப்பொழுது வெளியாகி சுமார் 225 நாட்களுக்கு மேல் ஓடியது.
1992 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் மன்னன் கோவக்கார மனைவியை எப்படி சமாதானப்படுத்தி அவரை நல்ல வழிக்கு கொண்டு வருகிறார் என்பது தான் படத்தின் கதை. படம் வெளிவந்து 301 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.
1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்ஷா இந்த படத்தில் முதல் பாதியில் அமைதியான ரஜினியாக தென்படுவார் இரண்டாவது பாதியில் அவர் மும்பையில் ஒரு தாதாவாக இருந்தது தெரிய வரும் படத்தில் அதிக ஆக்ஷன், சென்டிமென்ட் மற்றும் ரொமாண்டிக் சீன்கள் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கி 360 நாட்களுக்கு மேல் ஓடி வெட்டி கண்டது.
1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் படையப்பா.. ரஜினி, சிவாஜி, நாசர், ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், மன்சூர் அலிகான் என பலர் நடித்திருப்பார்கள். படத்தில் ரஜினி மிகப்பெரிய ஒரு பணக்கார குடும்பம் இருப்பார் ஒரு கட்டத்தில் மணிவண்ணன் சொத்தை பிடுங்கிக் கொண்டு இவர்களை ஒரு வீணா போன இடத்தில் தள்ளிவிடுவார் இதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பது தான் படத்தின் கதை படத்தின் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் அற்புதமாக இருந்ததால் 270 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அருணாச்சலம்.. இந்த படத்தில் தனது அப்பாவின் சொத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை ஆனால் கடைசியில் சில ட்விஸ்ட் இருக்கும்.. படம் சிறப்பாக ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படம் 207 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி. படத்தில் ரஜினி வேட்டையனாக வந்து மிரட்டி இருப்பார். படம் 890 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.