8 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் “விக்ரம் திரைப்படம்” சுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த தகவல்.

kamal-
kamal-

கமலஹாசன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ரொம்ப கை தேர்ந்தவர். அந்த வகையில் நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை சற்று வித்தியாசமாக இருந்ததால் இதை திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து அசத்தியது. படம் வெளிவந்து எதிர்பார்த்ததை விட மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தில் கமல் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றால் மறுபக்கம் பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா போன்றவர்களின் நடிப்பும் மிரட்டும் வகையில் இருந்தது. விக்ரம் படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களும், மக்களும் இன்றும் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

தற்போது வரை விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 260 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக விக்ரம் திரைப்படம் தமிழ், கேரளா ஆகிய பகுதிகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து.

முன்னேறிக் கொண்டிருக்கிறது கமலின் விக்ரம் திரைப்படம் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் 8 நாட்களில் மட்டுமே இதுவரை சுமார் 109 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளிய ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.