தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் இயக்குனர் தான் வெற்றிமாறன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படம் ஆனது இரண்டு பாகங்களாக வெளியாகும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது சுமார் பல வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் சேதுபதியின் கால் சீட்டு பிரச்சனை காரணமாகத்தான் இந்த திரைப்பட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது என படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் ஆனால் தற்பொழுது படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்கள்.
பொதுவாக காமெடி நடிகன் கதாநாயகனாக களமிறங்கினாலே ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருப்பது வழக்கம் தான் அந்த வகையில் சூரி இந்த திரைப்படத்தில் கதாநாயகன் என்பதன் காரணமாக திரைப்படத்தை திரையில் பார்த்து ரசிக்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஆனது காவல்துறையில் பயிற்சி மையங்களில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக கருதப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் வெறும் நான்கு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 40 கோடியை இந்த திரைப்படத்தின் செலவாக கருதப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தினை விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்களை தயாரித்த எல் ரேட் குமாரின் ஆர் எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு ரயில் விபத்து காட்சி அமைக்கப்பட உள்ளது இதற்காக ரயில் பெட்டிகள் ரயில் பாலம் என ஆகியவற்றிற்கு மிகப் பிரமாண்டமாக செட்டு போடப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் 90ஸ் காலகட்டத்தில் உள்ள ரயில் நிலையம் போல இதை அமைக்க வேண்டும். என வெற்றிமாறன் கூறிய நிலையில் 8 கோடி செலவில் இந்த விபத்து காட்சி எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்தது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இந்த காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதன் காரணமாக இந்த திரைப்படம் வெளிவந்தால் தான் தெரியும் இந்த காட்சிக்கு கிடைக்கும் பரிசு என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.