பொதுவாக சினிமாவில் நடிக்கும் பல்வேறு பிரபலங்களும் காதலில் ஈடுபடுவதும் அதன்பிறகு லிவிங் டுகதர் முறைப்படி வாழ்ந்து விட்டு பின்னர் பிடிக்கவில்லை என்று சென்று விடுவதும் வழக்கம் தான் அந்த வகையில் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகள் பற்றி பார்க்கலாம்.
நடிகர் கமலஹாசன் வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணம் நடந்த பிறகு சிலகாலம் குடும்பம் நடத்திய கமலஹாசன் அதன் பின்னர் பாலிவுட் சென்ற போது இது பிரபல நடிகை சரிகா மீது காதல் ஏற்பட்டு இருவரும் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ ஆரம்பித்த நிலையில் சரிகா கருவுற்று இருந்தால் அவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு பிறந்தவர்கள்தான் சுருதி ஹாசன் அக்ஷர ஹாசன். பின்னர் சரிகாவை விவாகரத்து செய்த கமல் கௌதமி உடன் சிலகாலம் லிவிங் டுகதர் முறைப்படி வாழ்ந்துள்ளார்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தவர் இவர் பிரபல தொழிலதிபர் வருண் என்பவரை காதலித்து வந்தார் இவ்வாறு இவர்களுக்குள் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்று திருமணம் வரை சென்று பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் திரிஷா ராணா என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த பின்னர் நண்பர் என சொல்லி டாட்டா காட்டி விட்டார்கள்.
சிம்பு நயன்தாரா இவர்கள் இருவரும் வல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதலித்து வந்தார்கள் பின்னர் இவர்கள் அன்னியோன்னியமாக இருக்கும் பல்வேறு சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டார்கள்.
பிரபுதேவா ராமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு அவருக்கு மூன்று ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சிம்பு காதல் முறிவுக்கு பிறகாக நடிகை நயன்தாராவை பிரபுதேவா காதலிக்க ஆரம்பித்தார். இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டார்கள் அதன் பிறகு நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
விஷால் நடிகை வரலட்சுமி உடன் 8 வயதிலிருந்து நட்பில் இருந்தவர் அந்தவகையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு மிக சிறப்பாக இருந்த வந்தார்கள் அந்த வகையில் இவர்கள் டேட்டிங் அவுட்டிங் என சுற்றி திரிந்த நிலையில் திருமணம் என்று பேசப்பட்ட பொழுது இருவரும் பிரிந்து விட்டார்கள்.
நடிகர் சித்தார்த் சுருதிஹாசனுடன் நட்புடன் இருந்து வந்தார் பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது மட்டுமில்லாமல் லிவிங் டுகெதர் முறைப்படி ஒரு அப்பார்ட்மெண்டில் வெகுநாளாக வசித்து வந்தார்கள். இந்த விஷயம் மீடியா பக்கம் தெரியவந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு நடிகர் சித்தார்த் சமந்தா உடன் காதலில் இருப்பதாக தெரிந்த நிலையில் இவர்கள் இருவரும் வெகு நாளாக லிவிங் டுகெதர் முறைப்படி வாழ ஆரம்பித்தார்கள் ஆனால் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களுடைய காதலில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் சிம்பு நயன்தாரா காதல் பிரிவிற்கு பிறகாக நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்து வந்தார். இவ்வாறு இவர்களுடைய காதலைப் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கிசுகிசு உருவான நிலையில் சில மாதங்கள் ஆன நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்.