நடிகைகளை துரத்தி துரத்தி காதலித்த 8 சினிமா பிரபலங்கள்.. லிஸ்ட்டில் மாட்டிய சிம்பு, அஜித்.!

simbu-
simbu-

திரைப்படங்களில் நடிகர் நடிகைகள் காதல் சென்டிமென்ட் ரொமான்ஸ் போன்ற காட்சிகளில் சேர்ந்து நடிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு இணைபிரியாத அன்பு ஏற்படும் அந்த அன்பு காதலாக மாறி பல ஹீரோ ஹீரோயின்களும் காதலித்தனர்.  அதில் ஒரு சில நடிகர் நடிகைகளின் காதல் கல்யாணத்தில் முடிந்தது ஆனால் பல பேருடைய காதல் பிரிந்தது. அப்படி சினிமா உலகில் சேர்ந்து பயணித்தபோது காதல் ஏற்பட்டு பின்பு பிரிந்த நடிகர் நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்.

1. பிரபு – குஷ்பூ : இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த சின்னத்தம்பி படம் நல்ல வெற்றி கொடுத்ததை தொடர்ந்து சினிமாவில் சிறப்பாக ஜொலித்தனர் மேலும் இருவருக்கும் காதலும் பிறந்தது ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். விஜயகாந்த் – ராதிகா : இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது அந்த நட்பு பின்பு காதலாக மாறியதாக பல பத்திரிகையாளர்கள் கிசு கிசு எழுதினர்.  இருந்தாலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வெவ்வேறு வழியில் பிரிந்தனர்.

2. விஜய் – சங்கவி : விஜயின் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் சங்கவியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அதனால் இருவரும் காதலிக்கின்றனர் என்ற செய்தியும் உலா வந்தது ஒரு கட்டத்தில் விஜய் சங்கவியை கழட்டி விட்டு வீட்டில் பார்த்த சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

3. அஜித் – ஹீரா : இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து ஒன்றாக பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வந்தனர் பின்பு அஜித் ஹீராவை கழட்டி விட்டு கொஞ்ச நாட்கள் தனியாக படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின்பு ஷாலினியை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.  4. கார்த்தி – தமன்னா : இருவரும் பையா படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் காதல் பிறந்தது பின்பு கார்த்தியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் தமன்னாவை விட்டுவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

5.சிம்பு – நயன், ஹன்சிகா, நிதி, ஸ்ரீநிதி : சிம்பு பல பெண்களுடன் கிசுகிசுவில் சிக்கினார், அப்படி முதலில் நயன்தாராவுடன் காதலில் இருந்தார் அது ஒரு கட்டத்தில் முடிவடைந்த பிறகு ஹன்சிகா, நிதி அகர்வால் என பல பெயர்கள் அடிபட்டது, மேலும் சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூட சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார் என்று பேசி இருந்தார்.

6.அனிருத் – அண்ட்ரியா : அனிருத் தன்னை விட ஆறு வயது மூத்த பாடகி ஆண்ட்ரியாவை காதலித்தார். இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. பின்பு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து தற்போது தனித்தனியாக இருந்து வருகின்றன.

7. விஷால் – வரலட்சுமி : இருவரும் ஒன்றாக சேர்ந்து முதலில் மதகஜராஜா என்ற படத்தில் நடித்தனர் இந்த படம் இன்னும் வெளிவரவில்லை இதைத்தொடர்ந்து சண்டக்கோழி 2 படத்திலும் சேர்ந்து நடித்தனர் இதன் மூலம் இருவரும் காதலித்து வந்த நிலையில் கூடிய விரைவிலியே இவர்களது காதல் முடிவுக்கு வந்துள்ளது