Samantha : வருட இறுதியிலும் சினிமாவில் சிறந்த நடிகர்கள் நடிகைகள் யார் என்பதை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும்.. அப்படி பிரபல நிறுவனம் ஒன்று 2023ல் சிறந்த 8 நடிகைகள் யார் என்ற லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. இது பொது மக்களின் கருத்து கணிப்பை வைத்தே வரிசை படுத்தப்படுகின்றன.
1. நடிகை அனுஷ்கா ஷெட்டி : இவர் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பின் உடல் எடை கூடிய அதை குறைக்க முடியாமல் இருந்து வருகிறார். அதன் விளைவாக அதிகம் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் ஹிட் படம் என்றால் பாகுபலி 2 தான்.. இதனால் இந்த பட்டியலில் இவருக்கு எட்டாவது இடம் கொடுத்திருக்கின்றனர்.
2. தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகைகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சமீபத்தில் விஜயின் மற்றும் பல டாப் ஹீரோ படங்களில் நடித்து பெரியஅளவில் பிரபலம் அடைந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஏழாவது இடத்தை பிடித்திருக்கின்றனர்.
3. அண்மையில் வெளிவந்த உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் நடித்தார். இது ஒருபக்கம் இருக்க இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் போட்டோவை போட்டு trending -ல் இருக்கிறார் இந்த பட்டியலில் ஆறாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
4. நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் ஒரு சில படங்களில் தலைகாட்டி வருகிறார். அப்படி இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 5. பாலிவுட்டில் வெற்றி நடிகையான தீபிகா படுகோன் இந்த லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
6. தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்று அழைக்கப்படும். நயன்தாரா திருமணத்திற்கு பின்பும் தனது மார்க்கெட்டை இழக்காமல் பிசியாக ஓடிக்கொண்டிருப்பவர். கைவசம் சுமார் 4, 5 படங்ககள் வைத்து உள்ளார். இவர் இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
7. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கும் ஆலியா பட் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 8. 2023 யில் சிறந்த நடிகைகளில் முதலிடத்தை பிடித்திருப்பவர் நடிகை சமந்தா இவர் கடந்த எட்டு வருடங்களாக இந்த இடத்தை தக்க வைத்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போ கூட ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். நடிகை சமந்தா தான் அதிகம் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருந்து வருகிறார்.