தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றிகொண்டுள்ளார். அதேபோல விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்த விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக வெறும் 4 திரைப்படங்களை இயக்கி அவை நான்குமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் தற்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களின் இயக்கத்தையும் தூண்டி உள்ளார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் மீண்டும் லோகேஷ்க்கு சவாலாக திரைப்படம் இயக்க வேண்டும் என்று குறிக்கோளாக இருக்கிறாராம். அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய போட்டியாளராக நினைத்துள்ளார்.
அவர் வேறு யாரும் கிடையாது இயக்குனர் பாரதிராஜா தான். என் நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா ஒன்று நடைபெற்றுள்ளது அப்பொழுது லோகேஷ் கனகராஜ் பற்றி பாரதிராஜா பாராட்டியது மட்டுமில்லாமல் அவரைப் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளார்.
இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமில்லாமல் பாரதிராஜா அவர்கள் இளம் இயக்குனர்களுடன் பயணிக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் சமீபத்தில் பாரதிராஜா இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது நான்கு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இரண்டு கதையை எழுதி வைத்துள்ளாராம். மேலும் இளம் இயக்குனர்களுடன் ஓட வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூடியது மட்டும் இல்லாமல் லோகேஷ் கூட்டணிகள் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார் பாரதிராஜா.