தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவர் 2000 ஆண்டு ஹேராம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஏழாம் அறிவு. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் 3, பூஜை, புலி ,வேதாளம் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இவர் ஹிந்தி ,தெலுங்கு என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு சமீப காலமாக பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் வெளிநாடுகளில் மேடைக் கச்சேரி செய்து வந்தார் இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நிகழ்ச்சிகளும் தடை பெற்றன.
மருத்துவர்கள் இந்நோய்க்கான மருந்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோணவிலிருந்து மக்களை காக்க போதிதர்மரை மீண்டும் அழைத்து வாருங்கள் என வேடிக்கையாக மீம்ஸ் போட்டுள்ளனர். இதனை ஸ்ருதிஹாசனும் பகிர்ந்துள்ளார்.
7ஆம் அறிவு படத்தில் நடித்திருந்த சுருதிஹாசன் அவர்கள் மருத்துவ ஆராய்ச்சியாளராக நடித்திருந்தார். இப்படத்தில் போதிதர்மர் மரபணுவை மீட்டு கொண்டு வந்ததும் நினைவுக்கு வரும் தானே.