படத்தில் நாங்க தான் மாஸ்.. ஹீரோ இல்லை என்பதை நிரூபித்த 7 வில்லன்கள்.!!

Ajith
Ajith

சினிமா உலகில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் ஹீரோக்களுக்கு மாஸான சீன்களை வைத்து அவரை முன்னிலை காட்ட நினைப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் ஹீரோவை மிஞ்சி வில்லன் மாஸாக தெரிவதோடு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் அது அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரையிலும் இருக்கிறது. அப்படி ஹீரோக்களை விட மாஸ் காட்டிய வில்லன்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்..

1. எஸ் ஜே சூர்யா  : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் “ஸ்பைடர்” இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்தது. படத்தில் மகேஷ்பாபு தனது  ரோலில் செம்ம மாஸாக நடித்திருந்தாலும் சுடலை கதாபாத்திரத்தில் அனைத்து  பேரையும் கவர்ந்து இழுத்தார் எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் அவர் சொல்லும் “அந்த சத்தம்”  இன்றும் பலரது நினைவில் இருக்கிறது இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

2. விஜய் சேதுபதி : இவர் சமீபகாலமாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக தான் நடித்து அசத்தி வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மாஸ் டயலாக் மற்றும் ஸ்கிரீன் ப்ளே என அனைத்தும் விஜயை விட விஜய் சேதுபதிக்கு சூப்பராக வொர்க் அவுட் ஆகிய இருந்தது  மாஸ்டர் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம் விஜய் சேதுபதி தான்..

3. அஜித் : ஆக்சன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவர் திடீரென வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா படத்தில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் முழு வில்லனாக நடித்திருந்தார்.  இந்த படம் போல அஜித் எத்தனை படம் பண்ணினாலும் கொண்டாட ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.

4. அரவிந்த்சாமி  : மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் உருவான தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக காட்சிகள் இருந்தாலும் அவருக்கு இணையாக அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் வந்தது மேலும் ஜெயம் ரவியை விட கோட் சூட், மாஸ் சீன் போன்றவற்றில் அரவிந்த்சாமி பின்னி படலெடுத்தார் தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றி பெற காரணமே அரவிந்த்சாமி என கூறப்படுகிறது.

5. அருண் விஜய் : கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்  சிக்ஸ் பேக் வைத்து விக்டர் கதாபாத்திரத்தில் நடித்தது பலரையும் கவர்ந்து இழுத்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

6. அக்ஷய்குமார்  : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் 2.0 இந்த படத்தில் ரஜினியை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய்குமார் ஆக்சன், எமோஷனல் சீன்களில் பின்னி பெடலெடுத்து பலரது மத்தியிலும் கைத்தட்டல் வாங்கினார்.

7. பகத் பாசில்  : எப்பொழுதுமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பகத் பாசில் மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். படத்தில்  அனைத்து சீன்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவை ஓவர் டேக் செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இன்று வரையிலும் ரத்தினவேலுவை பலரும் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.