லோ பட்ஜெட்டில் உருவாகி பல கோடி வசூல் செய்த 7 தமிழ் திரைப்படங்கள்..! இதுக்கு பேருதான் கெண்ட மீனு போட்டு தங்க மீன் தூக்குறதோ..!

low-batget-movie
low-batget-movie

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிக அளவு பட்ஜெட் போட்டு எடுக்கப்படும் அந்த வகையில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

எல்கேஜி திரைப்படமானது பிரபு இயக்கத்தில் உருவாகி ஆர் ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம்  அரசியல் மற்றும் நகைச்சுவை  சார்ந்த திரைப்படமாக அமைந்தது தான் காரணமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிடித்துவிட்டது  அந்த வகையில் மூன்று கோடி முதலீட்டில் இத்திரைப்படம் 15 கோடி வசூல் செய்தது.

இரும்புத்திரை திரைப்படமானது விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் விஷால் சமந்தா அர்ஜுன் ரோபோ ஷங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் ஆனது வெறும் 14 கோடி மட்டுமே முதலீடு போடப்பட்டது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியது.

கோலமாவு கோகிலா திரைப்படமானது லைகா புரோடக்சன் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான இத்திரைப்படம் எட்டு கோடி முதலீட்டில் 75 கோடி வாசல் பெற்று சாதனை படைத்தது.

96 திரைப்படமானது விஜய் சேதுபதி திரிஷா ஆகியோர்கள் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் அந்தவகையில் இத்திரைப்படம் பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 18 கோடி தான் அந்த வகையில்  உலக அளவில் இத்திரைப்படம் 55 கோடி வசூல் செய்தது.

தீரன்  வினோத் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்திருந்தார் இவ்வாறு உருவான இத்திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட  இத்திரைப்படத்திற்கு ஆன செலவு முப்பத்தி ஆறு கோடி ஆனால் வசூல் செய்ததோ தொண்ணூத்தி ஏழு கோடி.

ராட்சசன் திரைப்படம் ஆனது விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படமாகும்.  இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் ராட்சசனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக  விஷ்ணு விஷால் நடித்திருப்பார். 30 கோடியில் உருவாக்க பட்ட இத்திரைப்படம் 75 கோடி வசூல் செய்தது.

டிமான்டி காலனி முத்துக்குமார் இயக்கத்தில் அருள்நிதி ரமேஷ் திலக் அபிஷேக் ஜோசப் ஆகியோர்  நடித்த இத்திரைப்படத்திற்கு இரண்டு கோடி முதலீட்டில்  எடுக்கப்பட்டு 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.