தமிழ் திரை உலகில் வருடத்திற்கு குறைந்தது 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன. ஆனால் அந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றியை ருசிகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.. பாதி படங்கள்தான் வெற்றியை ருசிக்கும் அதில் ஒரு சில திரைப்படங்கள்தான் நாம் எதிர்பார்க்காத வசூலை அள்ளி புதிய சாதனைகள் படைக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வருடத்தில் பல டாப் நடிகர்கள் விருவிருப்பாக படங்களில் நடித்து வருவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதோடு மட்டுமல்லாமல் நிச்சயம் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது அதன்படி இந்த வருடத்தில் ஹிட் அடிக்கும் 7 திரைப்படங்கள் குறித்துதான் நாம் பார்க்க இருக்கிறோம்..
1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் கூறப்படுகிறது.
2. கமல் : தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க சங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது.
3. விக்ரம் : மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளிவர உள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்து காணப்படுவதால் நிச்சயம் இந்த படமும் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
4. விஜய் சேதுபதி : காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் விடுதலை இந்த படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களுக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் ஒரு படமாக உருவாகியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது மேலும் வெற்றி மாறன் இந்த படத்தை எடுத்துள்ளது படத்திற்கு இன்னும் பிளஸ்.. துருவ நட்சத்திரம், பத்து தல, லியோ போன்ற படங்களும் இந்த வருடத்தில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என கூறப்படுகிறது.