நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் 7 திரைப்படங்கள்.! லியோ படத்திற்கு வந்த சிக்கல்..

vijay
vijay

Tamil Movies: 10 நாட்கள் நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு 7 திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் லிஸ்டை தற்பொழுது பார்க்கலாம். இந்த 7 திரைப்படங்களும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்பதால் லியோ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் கண்டிப்பாக லியோ வெற்றியினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலகிருஷ்ணா: தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் பகவத் கேசரி திரைப்படம் லியோ படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் ரிலீஸ் ஆக உள்ளது.

டைகர் நாகேஸ்வர ராவ்: அக்டோபர் 20ஆம் தேதி நடிகர் ரவி தேஜா நடித்திருக்கும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

டைகர் ஷெராப்: டைகர் ஷெராப் நடித்திருக்கும் கணபதி என்ற திரைப்படமும், கங்கனா ரணாவத் நடித்திருக்கும் தேஜாஸ் என்ற படமும் பாலிவுட்டில் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிவராஜ்குமார்: கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்ட் திரைப்படம் லியோ படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வெளியாக உள்ளது.

பிரித்விராஜ்: பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் ஆடு ஜீவிதா என்ற படமும் ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தான் வெளியாக உள்ளது.

இவ்வாறு நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு எத்தனை திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகள் கலைக்கட்ட உள்ளது. ஆனால் இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு நிறைய சிக்கல்கள் வந்துள்ளது. எனவே இதன் காரணத்தினால் லியோ படத்தின் வசூலுக்கு சிக்கல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.