காதலை ரொம்ப அழகாக காட்டிய 6 திரைப்படங்கள் – என்ன ஃபினிஷிங் தான் கொஞ்சம் சோகம்..

vijay-
vijay-

சினிமா உலகில் வெவ்வேறு கதை களத்துடன் எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்து ஹிட் அடிகின்றன. குறிப்பாக காதல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் சேரும் காதலை விட சேரா காதல் படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நின்று பேசும் அப்படி மறக்க முடியாத சில காதல் படங்களை பற்றி பார்ப்போம்.

1.விண்ணைத்தாண்டி வருவாயா : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளிவந்த இந்த படம் பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் கார்த்தி ஜெஸ்ஸியின் காதல் கதையை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது. 2. ராவணன் : மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரித்திவிராஜ் போன்றோர் நடித்திருந்தனர்.

பிரித்திவிராஜ் ஐஸ்வர்யாராய் இருவருக்கும் திருமணமாகி இருந்தாலும் விக்ரம் ஐஸ்வர்யா ராய்யை கடத்திக் கொண்டு காட்டில் வைத்திருக்கும். 3.சில்லுனு ஒரு காதல் : நடிகர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் சூர்யா பூமிகா இடையே அழகான காதல் ஏற்பட்டு இருந்தது

ஆனால் சில காரணங்களால் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் அந்த முதல் காதலியுடன் வாழ முடியாத அந்த உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். 4. 96 : விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளிவந்த இந்த படம் பள்ளிப்பருவ காதலை அழகாக வெளிப்படுத்தியிருந்தது படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் அவர்களது பள்ளி நினைவை அவ்வளவு அழகாக வெளிக்காட்டியது.

5. ஷாஜகான் : விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் விஜயின் ஒரு தலை காதலை அந்த பெண்ணிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு அழகான காதல் கதை. 6.மதராசபட்டினம் : இந்த படத்தில் ஒரு பணக்கார வெள்ளைக்கார பெண்ணுக்கும் துணி வெளுக்கும் சாதாரண மனிதனுக்கும் ஏற்படும் அழகான காதல் கதை. காதலி அவனை விட்டுப் பிரிந்தாலும் அந்த காதலியை நினைத்து கடைசி வரை வாழ்ந்து இருப்பார்.