வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நயன்தாராவை தூக்கி விட்ட 7 திரைப்படங்கள்.!

Nayanathara
Nayanathara

Nayanthara : சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதற்கான கடின உழைப்பு வேண்டும் ஒரு படம் தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து பல வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே திரை உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து நிற்க முடியும்..

அப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று முன்னணி நடிகையாக வருவர் நயன்தாரா.. இவர் பல வெற்றி / தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் நயன்தாராவின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்ற முக்கிய 7 திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்..

ராஜா ராணி : கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் இளம் இயக்குனர் அட்லீயின் முதல் படம் ஆகும் இதில் நயன்தாரா காதல் தோல்வி அடைந்து அதில் இருந்து மீள முடியாமல் வேறு ஒரு வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது போன்ற காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும் அதனாலே இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேவரைட் லிஸ்டில் இருக்கின்றன..

மாயா : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும்.. இந்த படத்தில் நயன்தாரா சாந்தமாக நடித்திருந்தாலும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்..

Nayanathara
Nayanathara

நானும் ரவுடி தான் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் நயன்தாரா காது கேட்காத பெண்ணாக மிகவும் வெகுளித்தனமாக நடித்திருப்பார்.. இந்தப் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்படி அமைந்தது..

கோலமாவு கோகிலா : இளம் இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படமான இந்த திரைப்படத்தில் நயன்தாரா தன் குடும்பத்தை காப்பாற்ற போதைப் பொருள் கடத்துபவராக நடித்திருந்தார்.

மூக்குத்தி அம்மன் : ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார்.. இந்த படம் அதிக என்டர்டைன்மென்ட் நிறைந்த படமாகும்..

Nayanathara
Nayanathara

அறம் : ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய படம். இந்த படத்தில் நயன்தாரா கலெக்டராக தைரியமான பெண்ணாக நடித்திருப்பார்..

Nayanathara
Nayanathara

பில்லா : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும்.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு நடிப்பு, கிளாமர் போன்ற அனைத்தையும் மாஸாக இந்த படத்தில் நயன்தாரா வெளி காட்டி இருப்பார்.