Tamil Movies: இந்த வாரம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இதற்காக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். ஜெயிலர் படம் நாளை வெளியாக இருக்கிறது. தற்போது மேலும் ஓடிடியில் இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று விட்டால் அதனை ஓடிடியில் ரிலீஸ் செய்வது வழக்கம் பெரும்பாலும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அப்படி சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கும் போர் தொழில் திரைப்படம் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
போர் தொழில் படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வாரம் போர் தொழில் படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
மாவீரன் படமும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற மாவீரன் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மூன்றாவதாக அம்மு அபிராமி நடித்திருக்கும் ‘வான் மூன்று’ என்ற படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் ‘பத்மினி’ என்ற மலையாள படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியிலும், ‘நெய்மர்’ என்ற மலையாள படம் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும், ஹிடிம்பா என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடி, கமாண்டோ என்ற ஹிந்தி படம் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது.