7 horror thriller tamil movies in 80’s: இன்று சினிமாவில் பல தொழில்நுட்பங்களை கொண்டு திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள், அதனால் திரைப்படம் பார்க்கும் பொழுது மக்களுக்கு பிரமிப்புடன் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பங்கள் பெரிதும் இல்லாத அந்த காலத்திலேயே அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு த்ரில்லர் படங்களை எடுத்துள்ளார்கள். அந்த வகையில் தமிழில் மிகப்பரிய ஹிட்டடித்த திரில்லர் படங்கள் நிறைய உண்டு அதில் சில திரைப்படங்கள் இங்கே காணலாம்.
அந்த நாள் – 1954-ஆம் ஆண்டு சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் பண்டரிபாய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அந்த நாள், இந்த திரைப்படம் தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் திரைப்படமாகும். படத்தில் ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். படத்தின் துவக்கத்தில் சிவாஜி கணேசனின் கதாபாத்திரம் கொலை செய்யப்படுகிறது கொன்றவர்கள் யார் என துப்பறிவாளர் கண்டுபிடிப்பதே படத்தின் கதை திரைப்படம் திரில்லர் மிரட்டி வெற்றி பெற்றது.
நெஞ்சம் மறப்பதில்லை – 1913ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண் குமார், தேவிகா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த திரைப்படம் மறு பிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைதார்கள், மேலும் எம்எஸ் காசிவிசுவநாதன் மனோகர் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து இருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடைந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மறுஆக்கம் உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.
புதிய பறவை – 1964ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம் ஆர் ராதா, சவுகார்ஜானகி, விகே ராமசாமி, நாகேஷ், மனோரமா ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புதிய பறவை. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பும், பாடலும் மிரள வைத்தது. இந்த திரைப்படம் ஒரு அற்புதமான திரில்லர் திரைப்படம்.
சாந்தி நிலையம் – 1969ஆம் ஆண்டு வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் சாந்தி நிலையம். இந்த திரைப்படத்தை ஜிஎஸ் மணி இயக்கியிருந்தார் படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா ஆகியர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரில்லர் திரைப்படம் ஆகும்.
சிகப்பு ரோஜாக்கள் – 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இந்தத் திரைப்படம் பார்ப்பவர்களை மிரளவைக்கும் திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தை இப்பொழுது உள்ள ரசிகர்கள் பார்த்தாலும் த்ரில்லராக இருக்கும்.
மூடுபனி – 1980ஆம் ஆண்டு வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் மூடுபனி. இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா இயக்கி இருந்தார், மேலும் படத்தில் பிரதாப், போத்தன் ஷபா என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியது.
நூறாவது நாள் – 1984ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் நூறாவது நாள். இந்த திரைப்படத்தை மணிவண்ணன் தான் இயக்கியிருந்தார், படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் சத்யராஜ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் குறைந்த செலவில் மிக குறுகிய நாட்களிலேயே எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெறும் 12 நாட்களிலேயே எடுக்கப்பட்டது, மனதிற்கு மிக பக்கபலமாக இருந்தது சத்யராஜ் வில்லன் கதாபாத்திரம் தான்.