முக்கிய தமிழ் ஹீரோக்கள் தவறவிட்ட 7 படங்கள் – லிஸ்ட் இதோ.!

tamil actors
tamil actors

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகின்றனர். இருப்பினும் சில நல்ல கதைகள் வந்தும் சில காரணங்களால் தவிர்ப்பது வழக்கம் ஒரு சில படங்கள் போஸ்டர் வந்தும் டிராப் ஆகி விடுகின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் படத்தில் கமிட் ஆகி பின் சில காரணங்களால் படங்கள் டிராப் ஆகிவிடும் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. விக்ரம் – கரிகாலன்  : நடிகர் விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்த வகையில் எல். ஐ. கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த திரைப்படம் கரிகாலன் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜரைன் இணைய இருந்தார் பல தொழில் நுட்பங்களைக் கொண்டு உருவாக இருந்த இந்த படம் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு நடக்கவே இல்லை.

2. தனுஷ் – சூதாடி : சைலண்டாக இருந்து கொண்டு படங்களில் சூப்பராக நடிப்பதை வேலையாக வைத்திருப்பவர் நடிகர் தனுஷ் இவர் வெற்றிமாறனுடன் கை கோர்த்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். ஆடுகளம் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து சூதாடி என்ற படத்தை தொடங்க இருந்தனர் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருந்தார் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

3. சிம்பு – கெட்டவன் : நடிகர் சிம்பு சினிமா உலகில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பன்முக தன்மை கொண்டவராக ஓடினார் இவர் 2007 ஆம் ஆண்டு கெட்டவன் என்ற திரைப் படத்தில் நடிக்க இருந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ட்ராப்பானது மீண்டும் 2017 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக சிம்பு அறிவித்தார் ஆனால் பிறகு எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

4. விஜய் – யோகன் அத்தியாயம் ஒன்று : தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடுபவர் இவர் கௌதம் மேனனுடன் கைகோர்த்து இந்த படத்தில் நடிக்க இருந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனதால் விஜய் ஒரு கட்டத்தில் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து துப்பாக்கி படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

5.  அஜித் – மிரட்டல் : தீனா படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் மிரட்டல் இந்த படம் தொடங்கப்படுவதாக 15 வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது ஆனால் அதன் பிறகு இந்த படம் பற்றி எந்த ஒரு தகவலும் தெளிவாக வெளிவரவில்லை.

6. கமலஹாசன் – மருதநாயகம்  : வரலாற்று கதையை மையமாக வைத்து கமலஹாசன் நடிக்க இருந்த திரைப்படம் மருதநாயகம் இது கமலஹாசனின் கனவு படம் என்று கூட சொல்லலாம் இந்த படம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அப்பொழுது இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி இப்பொழுது இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது தற்பொழுது பண சிக்கல் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறதாம்.

7. ரஜினி – ராணா  : தசாவதாரம் படத்திற்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்க இருந்த திரைப்படம் தான் ராணா. 2011 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது பின் இந்த படம் பத்தி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை..