அண்மை காலமாக சினிமா உலகில் ஹீரோ, ஹீரோயின்னுக்கு நிகராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் வில்லன், வில்லிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.. அப்படி சில முக்கிய படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து புகழ்பெற்ற நடிகைகளை பற்றி பார்ப்போம்..
1.ரெஜினா காசண்டா : விஷால் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சக்ரா திரைப்படத்தில் முக்கியமான நெகடிவ் ரோலில் நடித்து பல இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக அமைந்தவர் ரெஜினா காசண்டா..
2. ரம்யா கிருஷ்ணன் : ஆரம்பத்தில் குணத்திர மற்றும் ஹீரோயின்னாக நடித்து வந்த இவர் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.. இந்தக் கூட்டணி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஜெயிலர் படத்தில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
3. சமந்தா : தி ஃபேமிலி மேன் 2 படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அதன் பட வாய்ப்புகள் குவிந்தன. சமந்தாவிற்கு தி ஃபேமிலி மேன் 2 படம் ஒரு திருப்புமுனை படமாகும்.
4. திரிஷா : தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த கொடி திரைப்படத்தில் திரிஷா ஹீரோயின் ஆகவும் வில்லியாகவும் தைரியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இந்த படத்தில் அரசியல்வாதியான திரிஷா தனுஷை கொலை செய்யும் அளவிற்கு சென்றவர்..
5. ஜோதிகா : திருமணத்திற்கு பிறகும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
6. அனசுயா பரத்வாஜ் : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பல விருதுகளையும் தட்டிச் சென்றவர்..
7. ரீமா சென் : வல்லவன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் அதிலும் குறிப்பாக வல்லவன் படத்தில் இவருடைய ஆக்டிங் வேற லெவலில் இருக்கும்..