பல வருடம் கழித்து வெளியாகிய ஏழாம் அறிவு படத்திலிருந்து யாரும் பார்த்திராத வீடியோ.? சூர்யா மாஸ் காட்டுறாரு

suriya
suriya

நடிகர் சூர்யா வாரிசு நடிகராக கால் தடம் பதித்தாலும் தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், தற்பொழுது இவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

2011ம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஏழாம் அறிவு, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, மேலும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருப்பார், வில்லனாக ஜானி ட்ரை நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் சூர்யா போதிதருமர் பலவிதமான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பார்.

அந்த சண்டைக்காட்சி வீடியோக்கள் எப்பொழுது பார்த்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு சண்டை காட்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது ஏழாம் அறிவு திரைப்படத்தின் பொழுது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு விடியோ என தெரிகிறது ஆனாலும் இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து ரசித்து லைக் செய்து வருகிறார்கள்.