கல்யாணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக கைவிட்ட 7 நடிகைகள் – இப்ப இருந்தால் இவங்க தான் டாப்.? யார் அது தெரியுமா..

actress-
actress-

சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் சிலர் தனது திறமை மற்றும் அழகை வெளிப்படுத்தி கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகின்றனர். அப்படி ரசிகர்கள் மத்தியில் குடிபெயர்ந்த பின்பு அவர்களது சொந்த வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று ஆன பிறகு ஒரு சிலர் நடிப்பை விட்டு விடுகின்றனர்.

ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நடிகைகள் பற்றி பார்ப்போம். குஷ்பூ : இவர் என்பது காலகட்டங்களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் இவருக்கென தனி ரசிகர் மன்றம் மற்றும் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் என இவரை கொண்டாடி வந்தனர்.

ஆனால் குஷ்பு இயக்குநர் சுந்தர் சி யை அப்போது காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நீண்ட பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் தற்போது ஒரு சில முக்கிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனா : இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி பிரபலமடைந்தவர் ஒரு கட்டத்தில் இவர் பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இறங்கினார்.

இவர்களுக்கு நைனிகா என்ற பெண் உள்ளது அந்த குழந்தை தற்போது சினிமாவில் கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமா சென் : இவர் மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், பகவதி,  வல்லவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் பின்பு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் செட்டிலாகி உள்ளார்.

ஜெனிலியா :  சினிமா உலகில் பல நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் குடிபெயர்ந்தவர் பின்பு ஒரு கட்டத்தில் பாலிவுட் நடிகர் ரித்தீஷை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். லைலா :  பிதாமகன், நந்தா, தீனா போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் பின்பு திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகி உள்ளார்.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அசின் : அஜித் விஜய் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்ந்து கொண்டு இருந்தவர் பின்பு திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி உள்ளார்.

நஸ்ரியா : தமிழில் பல படங்களில் தனது சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.