ஹீரோவாக களம் இறங்கி முதல் படத்திலேயே “அதிரிபுதிரி ஹிட்” கொடுத்த 7 நடிகர்கள்.! இந்த லிஸ்டுல ரஜினி, விஜய், அஜித்துக்கு இடமே இல்லை..

movies
movies

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் வரவேற்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது அந்த வகையில் 80, 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் பல்வேறு நடிகர்கள் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர் ஆனால் அவர்கள் நடித்த முதல் படம் பெரிய அளவில் வெற்றியை ருசித்து இருக்க மாட்டார்கள் ஆனால் இளம் நடிகர்கள் கூட முதல் படத்தையே மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக ஒரு பெரும் மக்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சரியப்பட போவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 7 நடிகர்கள் மட்டும் முதல் படத்திலேயே பிரமாண்ட வெற்றியை கொடுத்து அசத்தி உள்ளனர் அவர்கள் யார் என்பதை தெளிவாக பார்ப்போம். அரவிந்த்சாமி : தமிழ் சினிமாவில் ஆணழகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் அரவிந்த்சாமி சினிமாவுலகில் இவர் மேக்கப் போடாமல் நடித்தார் கூட அந்த அளவுக்கு அழகாக இருப்பாராம்.

அரவிந்த்சாமி ரஜினி நடித்த தளபதி படத்தில் கலெக்டராக நடித்து அசத்தியிருப்பார் இது அவருக்கு முதல் படம் இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த திரைப்படம் ரோஜா இந்த திரைப்படம் சற்று காதல் அதேசமயம் இந்திய உணர்வை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது. அவிந்தசாமி ஹீரோவாக நடித்த முதல் படமே   அதிரிபுதிரி ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் : ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்து இழுத்தர். மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை ருசித்தது அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி : தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த திரைப்படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் படம் சூப்பர்ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் ஓடி அசத்தியது. இதனால் ஜெயம் படத்தின் பெயரையே தனது பெயருடன் இணைத்துக் கொண்டு ஜெயம் ரவியாக தற்போது சினிமா உலகில் வெற்றி கண்டு வருகிறார்.

சசிகுமார் : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் நடிகர் சசிகுமார் இவர் முதலில் ஜெய், சுவாதி ஆகியவர்களுடன் இணைந்து இவரும் சுப்பிரமணியம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்ததால் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது சசிகுமார் நடித்த முதல் படம் பிரமாண்ட வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி : சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இந்த படம்  காதல் காட்சியளிக்கும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்தப் படத்தில் நடிகை பிரியாமணியின் கதாபாத்திரம் வியக்க வைக்கும் வகையில் இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார் இந்த திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடிய நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது மேலும் நடிகர் கார்த்தி நடித்த முதல் படமே இமாலய வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.

மோகன் : ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற டாப் நடிகர்கள் இருந்தாலும் அவர்களை ஒரு கட்டத்தில் ஓவர்டேக் செய்து அசத்தியவர்  மைக் மோகன் பெரும்பாலான திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மூடுபனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவர் கதாநாயகன் நடித்தது நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் அப்பொழுது வெளிவந்து சுமார் 365 நாட்கள் ஓடி வசதிகளோடு மோகனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

கார்த்திக் : சில்க் ஸ்மிதா, ராதா ஆகியோர் நடிப்பில் உருவான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானர். நவரச நாயகன் கார்த்திக் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார். அதிக நாட்கள் ஓடிய அசத்தியது. முதல் படத்திலேயே  சிறந்த நடிகருக்கான விருதை  பெற்றும் அசத்தினார்.