படப்பிடிப்பே இன்னும் துவங்காத பட்சத்தில் பல கோடி பிசினஸ் செய்த தளபதி 67.?

vijay
vijay

தளபதி விஜய் அண்மை காலமாக தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருகிறார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்காத அளவு வசூலை அள்ளுகின்றன. அதன்படி கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் கதை அம்சம் சுமாராக இருந்தாலும் வசூல் எதிர்பார்க்காத அளவு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 66-வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க தில் ராஜு தயாரித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிரபு, குஷ்பூ, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சங்கீதா, ஜெயசுதா போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் அவரது 67 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் உடன் இணைந்து மூன்றாவது முறையாக கைகோர்க்க உள்ளார்.

அதற்கான வேலைகளை இயக்குனர் லோகேஷ் பார்த்து வருகிறார் இந்தாண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி 67 படத்தில் நடிக்க தேவையான நடிகர் நடிகைகளை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வருகிறார். அதன்படி தற்போது வரை தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், பிரித்திவிராஜ், சமந்தா, திரிஷா போன்றவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் படம் பல கோடி பிசினஸ் செய்துள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை நெட் பிலிக்ஸ் ரூபாய் 120 கோடிக்கும், சாட்டிலைட் 80 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 50 கோடிக்கும் மொத்தம் 250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.