200 கோடியில் உருவான “ஜெயிலர்” படத்துடன் போட்டி போடும் 60 கோடி பட்ஜெட் படம்.. இதுவரை அள்ளிய வசூல்

Jailer
Jailer

Jailer : 2023 ஆம் ஆண்டு சினிமா நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டுமே பல புதிய ரெக்கார்டுகளை படைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தை எதிர்த்து பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் கிங் ஆஃப் கோதா திரைப்படம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அபிலாஷ் ஜோஷி இயக்க துல்கர் சல்மான், ஐஸ்வர்யா  லட்சுமி போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னவென்றால்.. கோதா நகரத்தில் தாதாவாக வலம் வருகிறார்.

துல்கர் சல்மான்அவருக்கு நண்பர் சபீர் கல்லரக்கல் உதவியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில்  துல்கர் சல்மானுக்கு தெரியாமல் சபீர் கல்லரக்கல் எதிரணி கூட்டாளி உடன் சேர்ந்து கஞ்சா தொழில் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த துல்கர் சல்மான் அவனை போட்டு அடித்து விட்டு அந்த நகரத்தை விட்டு வெளியேறுகிறார்.

பிறகு அந்த நகரம் சபீர் கைவசம் போய் விடுகிறது இந்த நகரத்தை மீண்டும் துல்கர் சல்மான் மீட்டு எடுப்பது தான் படத்தின் கதை.. படம் விறுவிறு பஞ்சமல்லாமல் இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர் அதனால் இந்த படத்தின் வசூல் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர், கிங் ஆஃப் கோதா இந்த இரண்டு திரைப்படங்களும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து பார்ப்போம்..

RAJINI
RAJINI

ஜெயிலர் படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி – வசூல் 581 கோடி, கிங் ஆஃப் கோதா  மொத்தம் பட்ஜெட் சுமார் 60 கோடி – வசூல் 34 கோடி, டிடி ரிட்டன்ஸ் 12 கோடி  பட்ஜெட் – வசூல் 29.2 கோடி, LGM மொத்த பட்ஜெட் 8 கோடி – வசூல் 8.65 கோடி. தற்பொழுதைய நிலவரப்படி ஜெயிலர் மற்றும் கிங் ஆஃப் கோதா ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போட்டி போடுகின்றன டிடி ரிட்டன்ஸ், LGM போன்ற படங்கள் இதிலிருந்து வெளியேறிவிட்டது.