சினிமாவை தாண்டி கோடீஸ்வர வீட்டு பெண்களை வளைத்து போட்ட 6 தமிழ் நடிகர்கள்.! லண்டன் தொழிலதிபர் மகளை மணந்த விஜய்..

vijay sangeetha

Tamil Actor: சினிமா பொருத்தவரை நடிகர், நடிகைகள் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். அப்படி திருமணம் செய்து கொண்ட பல பிரபலங்களும் இருந்து வரும் நிலையில் ஆனால் சினிமாவை தாண்டி கோடீஸ்வர வீட்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட 6 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

ஆர்யா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து பெற்றோர் சமதத்துடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் சாயிஷா கோடீஸ்வர விட்ட பெண் அதாவது சாயிஷாவின் தாத்தா திலீப்குமார் பாலிவுட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆவார்.

விக்ரம் பிரபு: பிரபுவின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமான விக்ரம் பிரபு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் நிலையில் இவர் லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய அப்பா எஸ்.எஸ்.எம் என்ற சேலத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கல்லூரியை நடத்தி வருகிறார்.

அருண் விஜய்: நடிகராகவும், வில்லனாகவும் கலக்கி வரும் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருடைய அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார்.

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருடைய அப்பா தேனான்டல் ஃபிலிம்ஸ்வுடைய மேனேஜராக இருந்து வருகிறார்.

விஜய்: நடிகர் விஜய் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் அப்பா லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர்.

கார்த்தி: நடிகர் கார்த்தி ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருடைய அப்பா ஈரோட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்.