பிக்பாஸ் வீட்டில் காலடியெடுத்து வைக்கும் 6 உறுதியான போட்டியாளர்கள்.? யார் யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கே தூக்கிப்போடும்.

bigboss
bigboss

உலக நாயகன் கமலஹாசன் வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுதும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இருந்தாலும் அவர் வெள்ளிதிரையையும் தாண்டி மற்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹாசன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 5 பிக்பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில்  6 வது சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். பிக் பாஸ் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது.

இதுவரை விஜய் டிவி தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ லோகோ மற்றும் சில அப்டேட்டுகளை மட்டுமே கொடுத்திருக்கிறது ஆனால் இந்த சீசனில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறது ஆனால் ரசிகர்கள் பொறுமை தாங்க முடியாமல் யார் யார் கலந்து கொள்கிறார்கள்.

என தொடர்ந்து கேள்வி கேட்டு வந்த வண்ணமே இருக்கின்றனர் இருந்தும் தொடர்ந்து ஒரு சில பெயர்கள் மட்டும் அடிபட்டு வருகின்றன. அந்த பிரபலங்கள் யார் என்பது குறித்து பார்ப்போம். ரக்ஷிதா மகாலட்சுமி, மைனா நந்தினி ஆகியோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சரவணன் மீனாட்சி தொடரில் தோழிகளாக நடித்தனர். இவர்களுடன் ஜீ தமிழ் சத்தியா சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

தொகுப்பாளினியும் , நடிகையுமான  மகேஸ்வரி, சமீபத்தில் சோசியல் மீடியாவை கலக்கிய ரவீந்தர் மேலும் youtube பிரபலம் ஜிபி முத்து அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம் மொத்தம் இந்த ஆறு பேர் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியான லிஸ்ட் வந்துவிடும் என தெரிய வருகிறது.