தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனது சம்பளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி ஓடுகின்றனர் ஆனால் இப்படி இருக்கும் நடிகர்கள் மிகப்பெரிய அளவில் படித்திருக்கிறார்கள் என்றால் இல்லை.. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக இருக்கும் ஆறு தமிழ் நடிகர்கள் பள்ளிபடிப்பை கூட ஒழுங்காக முடிக்கவில்லை அவர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. ரஜினி : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. பத்தாவது கூட ஒழுங்காக முடிக்கவில்லை எக்ஸாம் நேரத்தில் ஊரிலிருந்து ட்ரெயின் ஏரி சென்னை வந்தார் அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைத்ததால் இவர் சுத்தமாக அதன் பிறகு படிக்கவில்லை..
2. கமல் : உலகநாயகன் கமலஹாசன் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அதனால் சரியாக இவர் படிப்பை தொடர முடியவில்லை பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் அடுத்ததாக கல்லூரி பக்கம் போகாமல் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் அது அவருக்கு வெற்றியை கொடுக்க தொடர்ந்து படங்களில் நடித்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. விஜய் : எஸ் ஏ சந்திரசேகர் மகன் விஜய் படிப்பில் சுமாராக இருந்தாலும் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்து லோயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தார் ஆனால் இந்த சமயத்தில் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக கிடைத்ததால் படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்து தற்போது தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
4. அஜித் : தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித். இவர் அண்மை காலமாக தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இவர் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதன் பிறகு இவர் பைக் மெக்கானிக் சினிமா போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இவரால் படிப்பை தொடர முடியவில்லை.
5. பிரசாந்த் : பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் இப்பொழுது அந்தகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்காக லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிப்பை தொடர்ந்தார் அப்பொழுது பட வாய்ப்புகள் ஏராளமாக வந்ததால் படிப்பை விட்டுவிட்டு சினிமாவில் ஆர்வம் காட்டினார்.
6. நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபு வெளி படிப்பை முடித்துவிட்டு லோயோலா கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார் இந்த சமயத்தில் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்ததால் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் ஆர்வம் காட்டி நடித்தாராம்..