தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் படங்கள் ஒரு சில படங்கள் திரையங்கில் வெற்றி பெறுகின்றன. பிறகு 30 நாட்கள் கழித்து OTT தளத்தில் படங்கள் ரிலீஸ் ஆகின்றன இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.
அந்த வகையில் பல ஓட்டிட்டு தளங்கள் செயல்படுகின்றன குறிப்பாக நெட்ஃபிளிக்ஸ், sony live, அமேசான், ஹாட் ஸ்டார் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வகையில் இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் தரமான ஆறு படங்கள் என்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. இந்த ஆண்டு நடிகர் கார்த்திக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது இவர் இந்த ஆண்டில் மட்டுமே மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த மூன்று படங்களுமே வெற்றி படங்கள்தான் ஏன் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி ஆஹா OTT தளத்தில் வெளியாகி உள்ளது அதுவும் தமிழ் தெலுங்கு, ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. 1899 என்ற ஜெர்மன் வெப் சீரிஸ் ஒன்று கடந்த நவம்பர் 17ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது இந்த சீரியஸ் முழுக்க முழுக்க ஒரு செம்ம த்ரில்லர் இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
3. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ஹிந்தி டாப் ஹீரோ சல்மான் கான் நடிப்பில் உருவான திரைப்படம் காட் பாதர்.. இந்த படம் இவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது இந்த படம் நவம்பர் 19ஆம் தேதி ஆன இன்று நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது இந்த படம் தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகிறது.
4. தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்த ஓடிக்கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இந்த திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது இந்த படம் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5. நித்யா, நித்யா மேனன், பார்வதி, பத்மபிரியா மற்றும் பல ஹீரோயின்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் வொண்டர் வுமன் இந்த திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி சோனி லைவ்வில் வெளியாகியது.
6. ரவதம் தெலுங்கு ஹிஸ்டரி திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது கடந்த நவம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.