சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் விசேஷ நாட்களில் தான் களமிறங்கும் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி – கமல், அஜித் – விஜய் இவர்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அந்த ரசிகர்கள் கூட்டத்தை சந்தோஷப்படுத்த..
விசேஷ நாட்களில் படங்களை இறக்கும் ரசிகர்களும் படத்தை திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த வகையில் அடுத்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இதில் அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
இந்த படத்தில் அதிக ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் இருக்கும் என தெரிய வருகிறது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகி உள்ளது இந்த இரண்டு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு திரைப்படங்கள் தான் பொங்கலுக்கு ரிலீசாகிறதா என்றால் இல்லை இந்த படங்களை தாண்டி நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிறது. மொத்தமாக அடுத்த பொங்கலை குறி வைத்து ஆறு திரைப்படங்கள் களம் காண்கின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி, குட்டே, ஏஜென்ட் ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன. இந்த ஆறு திரைப்படங்களும் மிகப்பெரிய திரைப்படங்கள் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதில் எந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளி ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..