நாட்டாமை ஆகவும் ஊர் தலைவராகவும் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஆறு நடிகர்கள். இன்று வரை மறக்க முடியாத நாட்டாமை மற்றும் பெரியண்ணா..
நாட்டாமை: 1994 ஆம் ஆண்டு சரத்குமார், மீனா, குஷ்பு, சங்கவி, மனோரமா, கவுண்டமணி ,செந்தில், பொன்னம்பலம், பாண்டு, வினு சக்கரவர்த்தி, வைஷ்ணவி விஜயகுமார் மகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் நாட்டாமை இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தான் இயக்கியிருந்தார். ஆர் பி சவுத்ரி தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வில்லனின் சூழ்ச்சியால் தன்னுடைய தம்பி சிக்கிக் கொள்வார் ஆனால் நீதி தவறாமல் தீர்ப்பு சொல்லிவிடுவார் ஆனால் சிறிது காலத்திலேயே தன்னுடைய தீர்ப்பு பொய்யான தெரிந்து தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்வார். இன்றளவும் நாட்டாமை திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு பெயர் போன திரைப்படம்.
தவசி: 2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் சவுந்தர்யா ஜெயசுதா வடிவுக்கரசி நாசர் வடிவேலு நிழல்கள் ரவி இளவரசு பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தவசி இந்த திரைப்படத்தை கே ஆர் சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார் அது மட்டுமல்லாமல் படத்தை ஜெயப்பிரகாஷ் ஞானவேல் ஆகியோர்கள் தயாரித்திருந்தார்கள் வித்யாசாகர் இசையில் வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தவறான வாக்கு கொடுத்து விடுவார் ஒரு விஜயகாந்த் அதனால் மற்றொரு விஜயகாந்த் பாதிக்கப்படுவார் பிறகு அனைத்து உண்மைகளும் தெரியவரும் இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
சிம்ம ராசி : சரத்குமார், குஷ்பு, மனோரமா, கனகா, ஆனந்தராஜ், வினோத், மணிவண்ணன், பொன்னம்பலம், தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிம்மராசி இந்த திரைப்படத்தை ஈரோடு சௌந்தர் இயக்கியிருந்தார் ஆர் பி சவுத்ரி தயாரித்திருந்தார் படம் வெளியாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படமும் கிட்டத்தட்ட பஞ்சாயத்தை மையமாக வைத்து வெளியானது.
சூரியவம்சம் : 1997 ஆம் ஆண்டு சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் , பிரியா ராமன் ஆகியோர் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சூரியவம்சம் இந்த திரைப்படத்தை ஆர் பி சவுத்ரி தயாரித்திருந்தார் ஆர் சுந்தர்ராஜன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பினார் இன்றளவும் வாத்து காமெடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சரத்குமார் இரட்டை வேடத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய மகனையே வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பார் அதன் பிறகு அவர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதுதான் கதை இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சின்ன கவுண்டர் : 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, சத்திய பிரியா, கவுண்டமணி, செந்தில், வடிவேல், ஆகிய நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சின்ன கவுண்டர் இந்த திரைப்படத்தை ஆர்வி உதயகுமார் இயக்கியிருந்தார் படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ஊர் நாட்டாமையாக இருப்பார் .
பெரியண்ணா: 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த், சூர்யா, மீனா, மனோரமா, மணிவண்ணன், ஆனந்தராஜ், வையாபுரி, ஆர் சுந்தர்ராஜன் எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பெரியண்ணா. இந்த திரைப்படத்தில் ஜெயிலில் இருக்கும் சூர்யா காதலில் விழுகிறார் அதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க பிறகு விஜயகாந்த் இருக்கும் இடத்தை வந்து சேர்கிறார்கள் அவரிடம் உதவி கேட்கும் பொழுது அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் இந்த திரைப்படத்தின் கதை இதுதான். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது