நடிகர் சூர்யாவை சினிமாவில் தூக்கிவிட்ட 6 திரைப்படங்கள்..

surya
surya

நடிகர் சூர்யா சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் பல அவமானங்களை கடந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு கைகொடுத்து தூக்கி விட்ட ஆறு திரைப்படங்களைப் பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஜெய் பீம்:- சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பின் மூலம் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம் இந்த திரைப்படம் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் வெளியாகி பல ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூரரைப் போற்று :- சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இந்தத் திரைப்படம் தற்போது ஆறு தேசிய விருதுகளை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய விருதை வாங்க பட குழுவினர் அனைவரும் டெல்லி சென்று உள்ளனர்.

சிங்கம்:- இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் சிங்கம். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா அவர்கள் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அயன் :- கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் அயன். இன்த திரைப்படம் போதை பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இந்த திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

காக்க காக்க:- இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் சூரியா அவர்கள் முதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

நந்தா:- இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படத்தில் சூர்யா ஒரு சவாலான நடிகர்களாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக சூர்யா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.