ஒரு திரைப்படம் வெளியாகி எப்படி இருக்கும் என்று டிரைலர் மூலம் அதை ஈசியாக கண்டுபிடித்து விடலாம் ஆனால் ட்ரெய்லரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு மண்ணை கவ்விய ஆறு திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
காஷ்மோரா:- கோகுல் இயக்கத்தில் கார்த்திக் நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள காஷ்மோரா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ஸ்ரேயா தமன்னா நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் ட்ரெய்லரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.
அஞ்சான்:- இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடிப்பில் வெளியாகிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் அஞ்சான். இந்த திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாததால் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
லிங்கா:- கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி அனுஷ்கா நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் ரஜினியின் மற்ற படத்தை விட லிங்கா திரைப்படம் மீது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இந்த படம் வெளியாக கடமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சிந்தித்தது.
புலி:- சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் சுருதிஹாசன் நடிப்பில் வெளியான புலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் இது ஒரு வரலாற்று திரைப்படம் என்பதால் மாறுபட்ட விஜயை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் புலி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் போல் இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.
விவேகம்:- சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான விவேகம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.