பொதுவாக காதல் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும் ஒரு இயல்பான விஷயம் தான் அந்த வகையில் அவை சிலருக்கு சுகத்தை கொடுக்கும் சிலருக்கு வேதனையை கொடுக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் சினிமாவில் சந்தோஷத்தையும் துக்கத்தையும் கொடுத்த காதல் திரைப்படங்கள் ஏராளமாக இருக்கிறது.
ஆனால் மிகப்பெரிய தாக்கத்தை மனதில் ஏற்படுத்திய காதல் திரைப்படங்கள் ஒரு சிலரை மட்டுமே அந்த வகையில் அந்த திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
தளபதி திரைப்படம் ஆனது 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகர்களாக ரஜினி மம்முட்டி மற்றும் ஷோபனா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கும் ஷோபனாவிற்கு உள்ள காதல் மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆனால் கடைசியில் இவர்களுடைய காதல் பிரிவில் முடியும்.
96 திரைப்படமானது பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதியும் கதாநாயகியாக திரிஷாவும் நடித்திருப்பார்கள். இவ்வாறு உருவான இந்த காதல் திரைப்படத்தை பார்த்த பலரும் கண்ணீர் சிந்தியது உண்டு.
வின்னைதாண்டி வருவாயா என்ற திரைப்படமானது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் திரிஷா கிறிஸ்தவ பெண்ணாக நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை இந்த திரைப்படத்தில் மிகத் தெளிவாக காட்டியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இறுதியில் அவர்களின் காதல் பிரிந்துவிடும்.
மூன்றாம் பிறை பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மூன்றாம்பிறை இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் பிலிம்பேர் விருதையும் பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்தது.
கும்கி திரைப்படம் இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருப்பார் அதேபோல கதாநாயகியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார் மேலும் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு யானை காகவும் இந்த ஊர் மக்களுக்காகவும் தன்னுடைய காதலை முடித்துக் கொள்வார்.
காதல் திரைப்படமானது பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் பள்ளிப் பருவத்தில் இருந்து சந்தியா பரத்தை காதலித்து வருவார் பின்னர் ஏற்றத்தாழ்வு பாகுபாட்டின் காரணமாக இவர்களுடைய காதல் பிரிவில் முடிந்தது மட்டுமில்லாமல் கடைசியில் பரத் பைத்தியமாக திரிவார்.