தமிழ் சினிமாவில் கேங்ஸ்டார் திரைப்படம் என்றாலே அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைக்கும் அப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு தோல்வியடைந்த திரைப்படங்கள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ரஜினி- காலா :- இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் ரஜினியின் கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.
விஜய்- தலைவா:- ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் தலைவா. இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் இந்த திரைப்படத்தினால் விஜய்க்கு பல அரசியல் பிரச்சினைகள் வந்தது அது மட்டுமல்ல இந்த படத்தின் வெளியீடு குறித்த தேதியில் வெளியிடாமல் தள்ளிப்போனது இதனாலையே இந்தப் படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது ஆனால் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யாததால் தோல்வியை சந்தித்தது.
அஜித்- ஜனா:- ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் அஜித் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ஜனா. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் படும் மோசமாக தோல்வியை சந்தித்தது.
சூர்யா- அஞ்சான்:- லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சான் இந்த திரைப்படத்தில் சூர்யா ராஜு பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த படம் மும்பையில் உள்ள ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தாலும் சொல்லும் அளவிற்கு வசூல் பார்க்காததால் இந்த படம் ஒரு தோல்வி படமாக உருவானது.
தனுஷ்- ஜகமே தந்திரம் :- கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேஸ்டர் திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் இந்த படத்தில் வரும் ரகிட ரகிட பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது ஆனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.
விக்ரம்- மகான்:- கார்த்திக் இயக்கத்தில் விக்ரம், துருவிக்ரம், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலவையாக வெளியான திரைப்படம் மகான். இந்த திரைப்படம் மோசமான தோல்வி பெற்றது.