2023 – ல் வெளியான பல படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது அப்படிப்பட்ட படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
ஜவான் : அட்லீகுமார் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன், எமோஷனல், காமெடி என இருந்தால் படம் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுத்து அனைத்து இடங்களிலும் அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக வெற்றி கண்டது மொத்தம் 1148 கோடி வசூல் செய்தது.
பதான் : சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருந்தது. படத்தில் தீபிகா படுகோன் கிளாமர் மற்றும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்தார். ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது அதன் காரணமாக வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது 1050 கோடி வசூல் செய்தது.
அனிமல் : சந்திப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் கலந்த படமாக உருவானது படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் பலர் நடித்து இருந்தனர் படம் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது இதுவரை மட்டுமே 700 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது.
அஜித் நடிக்கும் “விடாமுயற்சி” படத்தின் கதை இதுவா.? பிரபலம் சொன்ன தகவல்
கடார் 2 : அணில் ஷர்மா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்தது 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 691 கோடி வசூல் செய்தது சொல்லப்போனால் போட்ட காசை விட பத்து மடங்கு லாபத்தை எடுத்தது இந்த ஆண்டில் பெரிய லாபத்தை பார்த்த படம் என்றால் அது இதுதான்.
ஜெயிலர் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் அப்பா – மகன் பாசத்தை எடுத்துரைக்கும் படமாக இருந்தது அதில் சென்டிமென்ட், காமெடி என இருந்ததால் படம் அனைத்து தரப்பட்ட மக்களை மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் மொத்தமாக 600 கோடியில் இருந்து 650 கோடி வரை வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.
லியோ : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது.