Tamil movies: தொடர்ந்து சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி ஒரே நாளில் திரைக்கு வரும் 6 படங்கள் குறித்து பார்க்கலாம்.
கொலை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை படத்தினை பாலாஜி கே குமார் இயக்கி நிலையில் ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அநீதி: இதுவரையிலும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முரட்டு வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ் முதன் முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இன்று வெளியான இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ளது.
சத்திய சோதனை: பிரேம்ஜி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் கிராமத்தில் இருக்கும் காவல் நிலையக் கட்டமைப்பு, எதார்த்தமான நீதிமன்ற காட்சி அமைப்பு, காவல் நிலைய எல்லை பிரச்சனை என உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
எக்கோ: இயக்குனர் நவீன் கணேஷ் இந்த படத்தினை இயக்க ஸ்ரீ காந்த், வித்யா பிரதீப் இணைந்து நடித்துள்ளனர். இதுவும் சுவாரசியமான கதை பின்னணியில் உருவாகி இருக்கிறது.
இராக்கதன்: நடிகர் ரியாஸ் கான் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏ பிரவீன் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படமும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
ஓப்பன்ஹைய்மர்: உலக வரலாற்றில் மனித குலத்துக்கு மனிதனே ஏற்படுத்திய பேரழிவுகளை வரிசை படுத்தினால் அதில் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டு வீசிய சம்பவம் முன்னிலையில் வகிக்கும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களை குடித்த அந்த கொடூரம் மனித குலத்துக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய துயர் நிகழ்வுகளில் ஒன்று. இவ்வாறு உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றி எழுதிய இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஜே.ஓப்பன்ஹைய்மரின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.