தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் திரைப்படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ நல்ல கிளாமர் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இந்த கிளாமர் காட்சிக்கு சில நடிகைகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே அந்த காட்சிகளை நடித்து அடுத்த படங்களின் வாய்ப்பையும் பெறுகிறார்கள். ஆனால் அந்த இயக்குனர்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு மக்களின் மனதை விஷத்தை பதித்த ஆறு இயக்குனர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருகிறோம்.
ராம்கோபால் வர்மா :- தமிழில் சிவா மற்றும் ரங்கீலா ஆகிய திரைப்படங்களை இயக்கி தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி வருகிறார். பொதுவாக இயக்குனர் ராம்கோபால் வர்மா இவருடைய திரைப்படத்தின் போஸ்டராக இருந்தாலும் சரி திரைப்படமாக இருந்தாலும் சரி கிளாமராக தான் இருக்கும் அப்படி இவருடைய படத்தில் நடிக்கும் நடிகைகலுக்கும் பஞ்சம் கிடையாது இந்த திரைப்படத்தில் ஏராளமான கவர்ச்சியை காட்டி நடிப்பார்கள் இப்படி கவர்ச்சியான படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மா தற்போது பிட்டு படம் எடுக்கும் அளவிற்கு மாறிவிட்டார்.
வேலு பிரபாகரன் :- இயக்குனர், கதாசிரியர், நடிகர் என பன்முக கொண்டு சினிமாவில் விளங்கி வந்தவர் நடிகர் வேலு பிரபாகரன். இவருடைய படங்கள் முன்பெல்லாம் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார் ஆனால் பின்வரும் காலங்களில் வேலு பிரபாகரன் தன்னுடைய பாகங்களில் கவர்ச்சியான காட்சிகளை அதிகம் வைக்க ஆரம்பித்துவிட்டார். அதனாலேயே அவருடைய படங்கள் சரியாக வரவில்லை இதனால் சினிமாவில் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் :- இயக்குனர் செல்வராகவனின் திரைப்பதத்திர்க்கே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய கதைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு தன்னுடைய படத்தின் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். அப்படி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ரீமாசென் கிளாமர் கட்சியில் நடித்துள்ளார் அதேபோல புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகை சினேகாவை கவர்ச்சி காட்ச்சியில் நடிக்க வைத்திருப்பார் இருந்தாலும் இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தோஷ் பி ஜெயக்குமார் :- நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அதையும் தாண்டி இந்த படம் திரையரங்கில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பினர் 2020 ஆம் ஆண்டு இரண்டாம் குத்து திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளியானது இதனாலேயே சந்தோஷ் கவர்ச்சி திரைப்படங்களின் இயக்குனர்களுக்கு முன்னோடியாக வலம் வருகிறார்.
சாமி:- இவர் நல்ல திரைப்படங்களை கொடுத்தாலும் அதில் கவர்ச்சி மற்றும் அந்தரங்க காட்சிகள் அதிகம் இருக்கும் அப்படி இவர் இயக்கிய உயிர், மிருகம், சிந்து சமவெளி, ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி மற்றும் அந்தரங்க காட்சிகள் அதிகம் இருக்கும்.